ECONOMY

சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் ரங்கோலி கோலம்- மந்திரி புசார் திறந்து வைத்தார்

19 அக்டோபர் 2022, 4:48 AM
சிலாங்கூர் மாநில அரசு தலைமைச் செயலகத்தில் ரங்கோலி கோலம்- மந்திரி புசார் திறந்து வைத்தார்

ஷா ஆலம், அக் 19- தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சுல்தான் சலாவுடின் அப்துல் அஜிஸ் ஷா கட்டித்தில் இந்துக்களின் பாரம்பரிய கலைகளில் ஒன்றான ரங்கோலி கோலம் வரையப்பட்டுள்ளது. 

மாநில அரசு தலைமைச் செயலகத்தின் முகப்பில் வண்ண அரிசிகள் கொண்டு உருவாக்கப்பட்ட  இந்த தாமரை வடிவிலான கோலம் காண்போரை பெரிதும் கவர்கிறது.

மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி இந்த கோலத்தை இன்று காலை அதிகாரபூர்வமாக திறந்து வைத்ததோடு அதன் மீது விளக்கையும் ஏற்றினார்.

இந்த நிகழ்வில் வீடமைப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ரோட்சியா இஸ்மாயில்  மற்றும்  யாயாசான் ஹிஜ்ரா அறவாரியத்தின் நிர்வாக இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது சுப்பாராடி முகமது நோர் ஆகியோரும் கலந்து கொண்டனர்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.