ALAM SEKITAR & CUACA

கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் வரை கனமழை பெய்யும்

18 அக்டோபர் 2022, 7:00 AM
கிள்ளான் பள்ளத்தாக்கில் இன்று பிற்பகல் வரை கனமழை பெய்யும்

ஷா ஆலம், அக் 18- கிள்ளான் பள்ளத்தாக்கின் பல பகுதிகளில் இன்று பிற்பகல் வரை இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதோடு பலத்த காற்றும் வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

கோலாலம்பூர், புத்ராஜெயா மற்றும் சிலாங்கூரின் கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட், உலு லங்காட் மற்றும் சிப்பாங் ஆகிய இடங்களில் வானிலை மோசமாக இருக்கும் என அம்மையம் கணித்துள்ளது.

இடி மற்றும் தீவிரத்தன்மையுடன் மணிக்கு 20 மில்லி மீட்டருக்கு மேல் மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடிக்கும் பட்சத்தில் அல்லது நீடிப்பதற்கான சாத்தியம் இருக்கும் பட்சத்தில் மலேசியா வானிலை ஆய்வுத் இந்த எச்சரிக்கையை விடுக்கும்.

இந்த இடியுடன் கூடிய மழை தொடர்பான எச்சரிக்கை வெளியிடப்பட்ட ஆறு மணி நேரத்திற்கு மட்டுமே செல்லுபடியாகக்கூடிய ஒரு குறுகியகால எச்சரிக்கையாகும்.

வானிலை தொடர்பான ஆகக் கடைசி மற்றும் உண்மையான தகவல்களுக்கு பொதுமக்கள் http://www.met.gov.my என்ற இணையதளத்தை பார்வையிடலாம் அல்லது  myCuaca செயலியை பதிவிறக்கவும் செய்யலாம்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.