ECONOMY

ஹராப்பான் மகளிர் பிரிவின் தேர்தல் இயந்திர தொடக்கவிழா சனியன்று ஷா ஆலமில் நடைபெறும்

12 அக்டோபர் 2022, 1:52 PM
ஹராப்பான் மகளிர் பிரிவின் தேர்தல் இயந்திர தொடக்கவிழா சனியன்று ஷா ஆலமில் நடைபெறும்

ஷா ஆலம், அக் 12- பக்கத்தான் ஹராப்பான் (ஹராப்பான்) மகளிர் பிரிவின் இல்திஸாம் மற்றும் 15வது பொதுத் தேர்தலுக்கான தேர்தல் இயந்திர தொடக்க விழா வரும் சனிக்கிழமை இங்குள்ள ராஜா மூடா மூசா மண்டபத்தில் நடைபெறும்.

மகளிர் நாட்டின் நம்பிக்கை எனும் கருப்பொருளிலான இந்த நிகழ்வு உரிமை பாதுகாப்பு, சுபிட்சத்திற்கான உத்தரவாதம், சமூகத்தின் வளப்பம் ஆகிய அம்சங்களை உள்ளக்கியிருக்கும் என்று ஹராப்பான் தகவல் பிரிவுத் தலைவி சோராயா சலிம் கூறினார்.

வரும் 15வது பொதுத் தேர்தலில் ஹராப்பான் கூட்டணியின் வெற்றியை உறுதி செய்யக்கூடிய அடிமட்ட மகளிர் உறுப்பினர்களை ஒன்று  திரட்டும் களமாக இந்த நிகழ்வு அமையும் என்று அவர் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

பாரிசான் நேஷனல் மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் அரசுகளுக்கு எதிராக மக்களை களமிறக்குவதையும் இந்த தேர்தல் இயந்திர தொடக்க விழா அமைகிறது என்றார் அவர்.

தன்மானமிக்க, நேர்மையான, முழுமையான நிர்வாகத்தை நோக்கி மகளிரை தயார் படுத்தக்கூடிய இந்த நிகழ்வை பக்கத்தான் ஹராப்பான் கூட்டணியின் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைப்பார் என்று அவர் சொன்னார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.