ECONOMY

நாளை மேலும் 9 இடங்களில் சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனை

11 அக்டோபர் 2022, 3:05 PM
நாளை மேலும் 9 இடங்களில் சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனை

 ஷா ஆலம் , அக் 11- சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனை நாளை மேலும் ஒன்பது இடங்களில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறவுள்ளது. ஜெலாஜா ஏசான் ராக்யாட் எனும் இத்திட்டம்  சுங்கை பாஞ்சாங், தாமான் டெம்பளர், சுங்கை துவா, தாமான் மேடான், கோத்தா டாமன்சாரா, செமெந்தா, சிஜங்காங் மற்றும் சுங்கை பீலேக் ஆகிய தொகுதிகளில் நடைபெறும்.

இந்த மலிவு விற்பனையில் நடுத்தர கோழி 10.00 ரிங்கிட்டுக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 ரிங்கிட்டுக்கும் மீன் ஒரு பாக்கெட் 6.00 ரிங்கிட்டுக்கும் இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 ரிங்கிட்டுக்கும் விற்கப்படும். இந்த அத்தியாவசிய பொருள் மவிவு விற்பனை கடந்த ஆகஸ்டு 31 ஆம் தேதி முதல் வரும் டிசம்பர் 31ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

மாநிலத்தின் 56 சட்டமன்றங்களில் உள்ள 260 இடங்களில் இந்த மலிவு விற்பனை நடத்தப் படுகிறது. சிலாங்கூர் மாநில மேம்பாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டிலான இந்த மலிவு விற்பனையின் வழி இதுவரை 80,000 பேர் வரை பயனடைந்துள்ளனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.