ALAM SEKITAR & CUACA

பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் சிறப்புக் கூட்டத்தை நடத்தும்

11 அக்டோபர் 2022, 4:02 AM
பொதுத் தேர்தலுக்கான தேதியை நிர்ணயிக்க தேர்தல் ஆணையம் சிறப்புக் கூட்டத்தை நடத்தும்

புத்ரா ஜெயா, அக் 11- பதினான்காவது நாடாளுமன்றம் நேற்று கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து 15வது பொதுத் தேர்தலை நடத்துவதற்கான தேதியை நிர்ணயிப்பதற்காக தேர்தல் ஆணையம் சிறப்பு கூட்டத்தை விரைவில் நடத்தவுள்ளது.

இந்த சிறப்புக் கூட்டத்தில் சபா மாநிலத்தின் புகாயா சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தலை பொதுத் தேர்தலுடன் சேர்த்து நடத்துவது குறித்தும் விவாதிக்கப்படும் என்று தேர்தல் ஆணையத்தின் செயலாளர் டத்தோ இக்மால்ருடின் இஷாக் கூறினார்.

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து பதினைந்தாவது பொதுத் தேர்தலில் தபால் மூலமாக வாக்களிக்கவிருப்போரும் வெளிநாடுகளில் உள்ளவர்களும் அதற்கான விண்ணப்பத்தை இப்போது தொடங்கி தாக்கல் செய்யலாம் என்றும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டப் பின்னர் அதன் முடிவு தேதி தெரிவிக்கப்படும் என்றும் அவர் சொன்னார்.

பதினான்காவது  நாடாளுன்றம் கலைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் நேற்று தொலைக்காட்சி வழி ஆற்றிய சிறப்புரையில் வெளியிட்டார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.