ECONOMY

குழந்தை சித்திரவதை- இருவருக்கு எதிரான தடுப்புக் காவல் ஆறு நாட்களுக்கு நீட்டிப்பு

11 அக்டோபர் 2022, 3:13 AM
குழந்தை சித்திரவதை- இருவருக்கு எதிரான தடுப்புக் காவல் ஆறு நாட்களுக்கு நீட்டிப்பு

ஜோகூர் பாரு, அக் 11 -  இங்குள்ள தாமான் ஸ்கூடாயில்  இம்மாதம் 2ஆம் தேதி மூன்று வயது குழந்தையை சித்திரவதை செய்த   சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட  கார் விற்பனையாளர் மற்றும் இந்தோனேசிய வீட்டுப் பணிப்பெண்ணின் தடுப்புக் காவல்  மேலும் ஆறு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் மேல் விசாரணைக்காக இன்று முதல் அக்டோபர் 16 ஆம் தேதி வரை அவ்விருவரையும் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்று ஜோகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ கமாருல் ஜமான் மாமாட் கூறினார்.

இந்த வழக்கு இன்னும் விசாரணையில் உள்ளதால்  இது குறித்து எந்தவிதமான ஊகங்களையும் வெளியிட வேண்டாம் என்று பொதுமக்களை அவர் அறிக்கை ஒன்றின் வாயிலாக கேட்டுக் கொண்டார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் இந்த  விசாரணை மேற்கொள்வதற்காக  சம்பந்தப்பட்ட 28 வயது விற்பனையாளர் மற்றும்  40 வயது மதிக்கத்தக்க வீட்டுப் பணிப்பெண் ஆகிய இருவரும் இன்று வரை ஏழு நாட்கள் காவலில் வைக்கப்பட்டிருந்தனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.