கோலாலம்பூர், அக் 11 - விரைவில் நடைபெறவிருக்கும் 15ஆவது பொதுத் தேர்தல் தொடர்பான பணிகளுக்காக நாடு முழுவதும் உள்ள 120,557 காவல் துறையினரில் 94,411 பேரை அரச மலேசிய போலீஸ் படை பணியமர்த்தவுள்ளது.பதினைந்தாவது பொதுத் தேர்தலுக்கு வழி விடும் 14வது நாடாளுமன்றம் கலைக்கப்படுவதாக பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ அக்ரில் சானி அப்துல்லா சானி கூறினார்.
ஜனநாயக முறையிலான தேர்தல் செயல்முறை சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக சம்பந்தப்பட்ட அனைத்து துறைகளுடன் குறிப்பாக, தேர்தல் ஆணையத்துடன் காவல்துறை இணைந்து செயல்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
பதினைந்தாவது பொதுத் தேர்தலின் போது இயற்கை ஏற்படும் இயற்கைப்
பேரிடர்களைச் சமாளிக்க மீட்பு நிறுவனங்களுடன் காவல்துறையும் இணைந்து பணியாற்றும் எனவும் அவர் சொன்னார்.
பொதுத் தேர்தல் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் இன்றி சீராக நடைபெற பொதுமக்கள் ஒன்றிணைந்து செயல்படுமாறு கேட்டுக்கொள்கிறோம் என்று அக்ரில் சானி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரசியல் சூழ்நிலையை எதிர்கொள்வதில் முதிர்ச்சியும் அனுபவமும் கொண்டவர்கள் என்ற வகையில் மக்கள் உணர்ச்சிகரமான பிரச்சினைகளைத் தொடுவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ECONOMY
15வது பொதுத் தேர்தல்- பாதுகாப்புப் பணியில் 94,411 போலீஸ்காரர்கள்- ஐ.ஜி.பி. தகவல்
11 அக்டோபர் 2022, 2:59 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

national
ஹார்முஸ் நீரிணை திறக்கப்பட்டாலும் அவசரப்பட்டு முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம் - பொருளாதார நிபுணர் அறிவுறுத்தல்
Shalini Rajamogun, Suhaila Shahrul Annuar
18 ஜூன் 2026

வகைnational
உங்கள் கருத்து என்ன?



