ECONOMY

எட்டு தொகுதிகளில் மாநில அரசின் மலிவு விற்பனை நாளை தொடர்கிறது

8 அக்டோபர் 2022, 2:17 PM
எட்டு தொகுதிகளில் மாநில அரசின் மலிவு விற்பனை நாளை தொடர்கிறது

ஷா ஆலம், அக் 8- சிலாங்கூர் மாநில அரசின் அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை நாளை மேலும் எட்டு தொகுதிகளில் காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறுகிறது.

இந்த ஏசான் மக்கள் விற்பனைத் திட்டம் கிளாங் ஜெயா பாசார் மாலாம் மையம் (செந்தோசா தொகுதி), தாமான் ராக்யாட் அண்டலாஸ் (சுங்கை காண்டீஸ் தொகுதி),

அல்-ரோமானியா பள்ளிவாசல் வளாகம் ( தஞ்சோங் சிப்பாட் தொகுதி),

பாராய் ராயா ஓராங் அஸ்லி (டெங்கில் தொகுதி) ஆகியவற்றில்  நடைபெறும்.

இவை தவிர ஜாலான் புடிங் மெம்பாரி (மேரு தொகுதி), ஜூலியா அடுக்குமாடி குடியிருப்பு (தாமான் டெம்ப்ளர் தொகுதி),  பிஜேஎஸ்  7/15 அடுக்குமாடி குடியிருப்பு (சுபாங் ஜெயா தொகுதி) மற்றும் தாமான்ஸ்ரீ இண்டா பி (பாயா ஜெராஸ் தொகுதி) ஆகிய இடங்களிலும் இந்த விற்பனைக்கு ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது.

இந்த விற்பனை திட்டத்தில் நடுத்தர கோழி 10.00 வெள்ளிக்கும் உறையவைக்கப்பட்ட மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும். மேலும், மீன் ஒரு பாக்கெட் 6.00  வெள்ளிக்கும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும் 5 கிலோ அரிசி 10 வெள்ளிக்கும் கிடைக்கும்.

மாநிலத்திலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் உள்ள 160 இடங்களில இந்த மலிவு விற்பனையை நடத்துவதற்கு மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது. இந்த விற்பனை கடந்த மாதம் 6 ஆம் தேதி தொடங்கி டிசம்பர் 6 ஆம் தேதி வரை நடைபெறும். 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.