ECONOMY

மாநில அரசின் மலிவு விற்பனை தாசேக் தாமான் ஸ்ரீ செர்டாங்கில் சனியன்று நடைபெறும்

5 அக்டோபர் 2022, 4:50 AM
மாநில அரசின் மலிவு விற்பனை தாசேக் தாமான் ஸ்ரீ செர்டாங்கில் சனியன்று நடைபெறும்
மாநில அரசின் மலிவு விற்பனை தாசேக் தாமான் ஸ்ரீ செர்டாங்கில் சனியன்று நடைபெறும்

ஷா ஆலம், அக் 5- சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான அத்தியாவசியப் பொருள் மலிவு விற்பனை வரும் சனிக்கிழமை தாசேக் தாமான் ஸ்ரீ செர்டாங் வளாகத்தில் நடைபெறும்.

 இந்த மலிவு விற்பனை காலை 9.00 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும் என்று ஸ்ரீ செர்டாங் தொகுதி சேவை மையம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

ஜெலாஜா ஏசான் ராக்யாட் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த விற்பனையில் கோழி 10.00 வெள்ளிக்கும் மாட்டிறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும் பி கிரேடு முட்டை ஒரு தட்டு 10.00 வெள்ளிக்கும் விற்கப்படும்.

இவை தவிர கெம்போங் மற்றும் செலாயாங் மீன்கள் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளி விலையிலும் 5 கிலோ சமையல் எண்ணெய் 25 வெள்ளி விலையிலும்  5 கிலோ அரிசி 10.00 வெள்ளி விலையிலும் இங்கு கிடைக்கும்.

சிலாங்கூரிலுள்ள 56 சட்டமன்றத் தொகுதிகளில் அடையாளம் காணப்பட்ட 160 இடங்களில் இந்த மலிவு விற்பனை கடந்த செப்டம்பர் 6 முதல் டிசம்பர் 31 வரை நடத்தப்படுகிறது. இந்த மலிவு விற்பனையை நடத்த மாநில அரசு ஒரு கோடி வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.