ECONOMY

நபிகள் நாயகம் பிறந்தநாள், தீபாவளியை முன்னிட்டு கூடுதல் இ.டி.எஸ் இரயில் சேவை- கே.டி.எம்.பி. அறிவிப்பு

5 அக்டோபர் 2022, 3:56 AM
நபிகள் நாயகம் பிறந்தநாள், தீபாவளியை முன்னிட்டு கூடுதல் இ.டி.எஸ் இரயில் சேவை- கே.டி.எம்.பி. அறிவிப்பு

கோலாலம்பூர், அக 5- நபிகள் நாயகம் பிறந்த நாள் மற்றும் தீபாவளியை முன்னிட்டு கோலாலம்பூர் சென்ட்ரல் முதல் பாடாங் பெசார் வரை இரு கூடுதல் இ.டி.எஸ். சேவைகளுக்கு கெராத்தாப்பி தானா மிலாயு பெர்ஹாட் (கே.டி.எம்.பி.) நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

இந்த கூடுதல் பயணச் சேவை இம்மாதம் 1,8 மற்றும் 10 ஆம் தேதிகளிலும் 21 முதல் 24 ஆம் தேதி வரையிலும் மேற்கொள்ளப்படும் என்று கே.டி.எம்.பி. நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது. 

இந்த கூடுதல் பயணச் சேவைக்கான டிக்கெட்டுகள் நேற்று தொடங்கி விற்பனையில் உள்ளதாக அந்நிறுவனம் அறிக்கை ஒன்றில் கூறியது. 

பயணிகளின் கோரிக்கை மற்றும் விடுமுறையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்குத் திரும்வோரின் வசதிக்காக இந்த கூடுதல் பயணச் சேவைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

இந்த இரயில் காலை 11.00 மணிக்கு பாடாங் பெசாரில் புறப்பட்டு  மாலை 4.36 மணிக்கு கோலாலம்பூர் சென்ட்ரல் நிலையம் வந்தடையும். கோலாலம்பூர் சென்டர்ல் நிலையத்திலிருந்து மாலை 5.05 மணிக்கு புறப்படும் இரயில் இரவு 10.34 மணிக்கு பாடாங் பெசார் சென்று சேரும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.