சிரம்பான், செப் 24- இங்குள்ள ஜாலான் கெடிடி 7, தாமான் பாரோய் ஜெயாவில் உள்ள ஒரு வீட்டில் நேற்று இரவு மூதாட்டி ஒருவர் காயங்களுடன் இறந்து கிடந்தார்.இச்சம்பவம் தொடர்பில் நேற்றிரவு இரவு 8.25 மணியளவில் தஙகளுக்கு தகவல் கிடைத்ததாக சிரம்பான் மாவட்ட காவல் துறைத் தலைவர் ஏசிபி நந்தா மரோஃப் கூறினார்.
சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்டச் சோதனையில் அந்த 70 வயது மூதாட்டியின் தனிப்பட்ட உடைமைகள் சில காணாமல் போனது கண்டறியப்பட்டது என அவர் சொன்னார்.
அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக இங்குள்ள துவாங்கு ஜாபர் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 302வது பிரிவின்படி விசாரணை மேற்கொள்ளப் படுவதாக கூறிய அவர், கம்போங் பெர்காட் செம்போங், ரெம்பாவ், நெகிரி செம்பிலான் என்ற முகவரியைச் சேர்ந்த முகமது ஃபைசுல் முகமது அலி கமில் (வயது 45) என்பவரை தாங்கள் தொடர்பு கொள்ள விரும்புவதாக சொன்னார்.
மேலும், சம்பவம் குறித்த தகவல்களை 06-6033 222 என்ற எண்ணில் புலனாய்வு அதிகாரி ஏஎஸ்பி ஃபௌஸான் அசிமா ரசாக்கிற்கு தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
ECONOMY
காயங்களுடன் மூதாட்டி இறந்து கிடந்தார்- உடைமைகள் மாயம்
24 செப்டெம்பர் 2022, 10:24 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

national
மலேசியர்களுக்கு வெ.1.99 விலையில் ரோன் 95 விற்பனை- அந்நியர்களுக்கு சந்தைக்கேற்ப விலை நிர்ணயம்
n.pakiya
27 ஜூலை 2025

selangor
உள்ளூராட்சி மன்றங்களின் செலவுகள் அதிகரிப்பு: மதிப்பீட்டு வரி உயர்த்தப்படாது என சிலாங்கூர் உறுதி
Shalini Rajamogun
29 ஏப்ரல் 2026

உங்கள் கருத்து என்ன?




