ALAM SEKITAR & CUACA

காட்டு யானை மிதித்து மூதாட்டி மரணம்

24 செப்டெம்பர் 2022, 6:26 AM
காட்டு யானை மிதித்து மூதாட்டி மரணம்

தாவாவ், செப் 24- இங்குள்ள ஜாலான் மெரோட்டா-கலாபக்கன் டும்பாஸ் பகுதிக்கு அருகே நேறறு காலை 7.00 மணியளவில் காட்டு யானை மிதித்ததில் மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

சம்சியா அர்ஷத் (வயது67) ,என்ற அந்த மூதாட்டி பேரப்பிள்ளைகளைப் பார்ப்பதற்காக  தனது கணவர் தாஹிர் சாலேவுடன் (வயது 60) மோட்டார் சைக்கிளில் கம்போங் ஹிதாயத் பத்து 4 இல் இருந்து கொங்சி 4 லாடாங் கெளபா சாவித் செந்தரமாடாவுக்கு சென்று கொண்டிருந்த போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

இதற்கிடையில், இச்சம்பவம் நிகழ்ந்ததை உறுதிப்படுத்திய தாவாவ் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஜாஸ்மின் ஹூசேன், இதன் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருவதாக கூறினார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து கருத்துரைத்த, தாவாவ் வன இலாகா அதிகாரி பிரைமஸ்  டம்பாஸ், அப்பகுதியில்  காட்டு யானைகள் அட்டகாசம்  தொடர்பாக தமது தரப்புக்கு புகார் கிடைத்துள்ளதாகக் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.