ECONOMY

பேரரசர் தம்பதியரின் மலேசிய தின வாழ்த்து

16 செப்டெம்பர் 2022, 10:32 AM
பேரரசர் தம்பதியரின் மலேசிய தின வாழ்த்து

கோலாலம்பூர், செப் 16- மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா மற்றும் அவரின் துணைவியார் துங்கு அஜிசா அமினா மைமுனா இஸ்கந்தாரியா 2022 மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் பேரரசர் தம்பதியர் தங்களின் மலேசிய தின வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.

மலேசியா அனைத்து விதமான அச்சுறுத்தல்கள் மற்றும் பேரழிவுகளிலிருந்தும் தொடர்ந்து பாதுகாக்கப்பட வேண்டும்.  அதே சமயம், நீடித்த செழிப்பும் ஒற்றுமையும் நீடிக்க வேண்டும் என அந்த வாழ்த்துச் செய்தியில் அவர்கள் குறிப்பிட்டனர்.

மலேசியா உருவானதை நினைவுக் கூறும் வகையில் ஒவ்வோராண்டும் செப்டம்பர் 16 ஆம் தேதி மலேசிய தினம் அனுசரிக்கப்படுகிறது.

இவ்வாண்டிற்கான தேசிய நிலையிலான மலேசிய தினக் கொண்டாட்டம் இன்றிரவு மலாக்கா பண்டார் ஹிலிர் சுதந்திர நினைவு சதுக்கத்தில் நடைபெறுகிறது.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.