ALAM SEKITAR & CUACA

பத்து பஹாட்டில் திடீர் வெள்ளம்- 255 பேர் பாதிப்பு

16 செப்டெம்பர் 2022, 6:44 AM
பத்து பஹாட்டில் திடீர் வெள்ளம்- 255 பேர் பாதிப்பு

பத்து பஹாட், செப் 16- இங்குள்ள ஸ்ரீ காடீங் பகுதியில் நேற்று ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 255 ஆக உயர்ந்துள்ளது. நேற்று காலை 8.00 மணியளவில் இந்த எண்ணிக்கை 204 ஆக இருந்தது.

இவர்கள் அனைவரும் கம்போங் பாரு ஸ்ரீ காடீங் உள்ளிட்ட ஐந்து பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர் என்று ஜோகூர் மாவட்ட பேரிடர் மேலாண்மைக் குழு அறிக்கை ஒன்றில்  தெரிவித்தது.

தற்போது 72 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஸ்ரீ காடீங் தேசிய பள்ளியில் உள்ள தற்காலிக நிவாரண மையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று முன்தினம் பிற்பகல் 1.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை இடை விடாது பெய்த அடைமழையில் ஸ்ரீ காடீங் வட்டாரத்தில் திடீர் வெள்ளம் ஏற்பட்டது. அச்சமயம் ஏற்பட்ட கடல் பெருக்கும் நிலைமையை மோசமாக்கியது

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.