ALAM SEKITAR & CUACA

சின்னம், சுலோகம் வரையும் போட்டியில் பங்கேற்க பொது மக்களுக்கு எம்.பி.எஸ்.ஏ. அழைப்பு

10 செப்டெம்பர் 2022, 4:38 AM
சின்னம், சுலோகம் வரையும் போட்டியில் பங்கேற்க பொது மக்களுக்கு எம்.பி.எஸ்.ஏ. அழைப்பு

ஷா ஆலம், செப் 10- குறைந்த கார்பன் நகர கட்டமைப்பு எனும் கருப்பொருளில் சின்னம் மற்றும் சுலோகம் வரையும் போட்டியில் பங்கேற்க பொது மக்களுக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் அழைப்பு விடுத்துள்ளது.

இந்த போட்டியில் பங்கேற்க ஆர்வம் உள்ளவர்கள் கீழ் காணும் அகப்பக்கம் வாயிலாக https://tinyurl.com/pertandinganrekaciptatagline  பதிவு செய்து கொள்ளும்படி தனது பேஸ்புக் பதிவில் மாநகர் மன்றம் கேட்டுக் கொண்டது.

“லோ கார்பன் சிட்டி ப்ரேம்வோர்க்“ (குறைந்த கார்பன் நகர கட்டமைப்பு) எனும் கருப்பொருளில் சின்னம் மற்றும் சுலோகம் வரையும் போட்டியில் பங்கேற்க வாருங்கள். இந்த போட்டிக்கு விண்ணப்பம் செய்வதற்கான இறுதி நாள் அக்டோபர் 5 ஆம் தேதியாகும் என்று அது தெரிவித்தது.

இப்போட்டியின் முதல் வெற்றியாளருக்கு 1,000 வெள்ளிப் பரிசும் இதர ஐந்து வெற்றியாளர்களுக்கு தலா 200 வெள்ளி ரொக்கமும் வழங்கப்படும்.

வகைpbt

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.