ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரின் ஏழு மாவட்டங்களில் மாலை வரை  அடை மழை பெய்யும்

6 செப்டெம்பர் 2022, 8:30 AM
சிலாங்கூரின் ஏழு மாவட்டங்களில் மாலை வரை  அடை மழை பெய்யும்

ஷா ஆலம், செப் 6- சிலாங்கூரின் ஏழு மாவட்டங்களில் இன்று மாலை வரை இடியுடன் கூடிய அடை மழையோடு பலத்த காற்றும் வீசும் என்று வானிலை ஆய்வுத் துறை எச்சரித்துள்ளது.

உலு சிலாங்கூர், கிள்ளான், கோம்பாக், பெட்டாலிங், கோல லங்காட், உலு லங்காட், சிப்பாங் ஆகியவையே பாதிக்கப்படும் அந்த மாவட்டங்களாகும் என்று அத்துறை தனது டிவிட்டர் பதிவில் கூறியது.

கோலாலம்பூர், புத்ரா ஜெயா, நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ஜெலுபு, சிரம்பான், கோல பிலா, ஜெம்போல் ஆகிய பகுதிகளிலும் இந்நிலை நீடிக்கும் என்று அது தெரிவித்தது.

ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லி மீட்டருக்கு அதிகமான இடியுடன் கூடிய மழை சுமார் ஒரு மணி நேரத்திற்கும் குறைவாக அல்லது ஒரு மணி நேரத்திற்கும் மேல் பெய்வதற்கான அறிகுறிகள் தென்படும் பட்சத்தில் இத்தகைய எச்சரிக்கை விடுக்கப்படும்.

ஆறு மணி நேரத்திற்கும் மிகாத நேரத்திற்கு வழங்கப்படும் குறுகிய நேர மழை எச்சரிக்கை இதுவாகும்.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.