கிள்ளான், ஆக 31 - சிலாங்கூர் ஒற்றுமை தூதர்களாக 15 இளைஞர்கள் நியமனம் செய்யப்பட்டதானது மாநிலத்தில் உள்ள மக்களிடையே சிறந்த புரிதலை ஏற்படுத்தக்கூடிய உற்சாகமான தலைவர்களை உருவாக்கும் முயற்சியாகும்.அந்த ஒற்றுமைத் தூதர்களின் நியமனம் மாநில அரசாங்கத்தை சமூகத்துடன் நெருக்கமாக கொண்டு வருவதோடு மக்களிடையே சிறந்த சகிப்புத்தன்மையையும் புரிதலையும் வளர்க்க உதவும் என்று ஒற்றுமைத் துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட் கூறினார்.
மக்கள் மத்தியில் சிறந்த புரிதலை வளர்ப்பதற்காக இந்த தூதர்கள் சமூகத்துடன் தங்களை நெருக்கமாகக் கொண்டு வருவார்கள். குறிப்பாக மதம் மற்றும் இனம் தொடர்பான பிரச்சினைகளில் தூண்டப்படும்போது மக்கள் விரைவாக வசைபாடுவதைக் காண நாங்கள் விரும்பவில்லை என்றார் அவர்.
இந்த திட்டத்திற்கு 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பூர்வக் குடியினர் உள்பட பல்வேறு இன, மத இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டது என்று அவர் கூறினார்.
முன்னதாக, நேற்று இங்குள்ள விண்ட்ஹம் ஹோட்டலில் நடைபெற்ற அறிமுக விழாவில் அந்த ஒற்றுமைத் தூதுவர்கள் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியிடமிருந்து நியமனக் கடிதங்களைப் பெற்றனர்.
ECONOMY
மக்களிடையே புரிந்துணர்வை ஏற்படுத்துவதில் ஒற்றுமைத் தூதர்கள் பெரும் பங்காற்றுவார்கள்
31 ஆகஸ்ட் 2022, 11:17 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

selangor
பராமரிப்புப் பொருளாதாரத்தை மேம்படுத்த தென் கொரிய நிறுவனங்களுடன் இணைந்து சிலாங்கூர் அரசு முயற்சி – அன்ஃபால் சாரி
Shalini Rajamogun
12 ஜூன் 2026

selangor
மக்கள் தொகை அடர்த்தியான பகுதிகளில் குற்றப் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படும்.
n.pakiya
29 ஜூலை 2025

national
இஸ்தானா நெகாராவில் இன்று தலைமை நீதிபதி பதவி உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
n.pakiya
29 ஜூலை 2025

வகைselangor
உங்கள் கருத்து என்ன?



