ALAM SEKITAR & CUACA

தலைமை நீதிபதி தம்பதியருக்கு தடையா? கிளந்தான் அரண்மனை மறுப்பு

27 ஆகஸ்ட் 2022, 8:14 AM
தலைமை நீதிபதி தம்பதியருக்கு தடையா? கிளந்தான் அரண்மனை மறுப்பு

கோத்தா பாரு, ஆக 27- நாட்டின் தலைமை நீதிபதி துன் தெங்கு மைமுன் துவான் மாட் மற்றும் அவரின் கணவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்த இணைய ஊடகச் செய்தியை கிளந்தான் அரண்மனை மறுத்துள்ளது.

அச்செய்தியில் துளியும் உண்மை இல்லை என்பதோடு அது அடிப்படையும் இல்லாதது என்று கிளந்தான் அரண்மனை அதிகாரி நிக் முகமது ஷப்ரிமான் அறிக்கை ஒன்றில் தெரிவித்தார்.

இது போன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டை கிளந்தான் அரண்மனை கடுமையாக கருதுவதாக அவர் கூறினார்.  இது போன்ற செய்திகளை வெளியிடுவதற்கு முன்னர் அரண்மனைத் தரப்புடன் தொடர்பு கொண்டு அதன் நம்பகத் தன்மையை உறுதிபடுத்திக் கொள்ளும்படி ஊடகங்களை அவர் வலியுறுத்தினார். இத்தகைய அடிப்படையற்றச் செய்திகளை தொடர்ந்து வெளிட்டு வந்தால் சம்பந்தப்பட்ட இணைய ஏட்டுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.