ECONOMY

லோரியுடன் மோதிய கார் தீப்பற்றியது- இளம் பெண் கருகி மாண்டார்

21 ஆகஸ்ட் 2022, 6:03 AM
லோரியுடன் மோதிய கார் தீப்பற்றியது- இளம் பெண் கருகி மாண்டார்

பண்டார் பெர்மைசூரி, ஆக 21- இங்குள்ள பத்து கோங் எனுமிடத்தில் நேற்று நிகழ்ந்த லோரி- பெரேடுவா கெலிசா கார் சம்பந்தப்பட்ட விபத்தில்  இளம் பெண் காரினுள் கருகி மாண்டார்.

நேற்று மாலை 5.35 மணியளவில் நிகழ்ந்த இவ்விபத்தில் நுருள் எமில்யா நத்தாஷா (வயது 21) என்ற அந்தப் பெண் சம்பவ இடத்திலே உயிரிழந்த வேளையில் லோரி ஓட்டுநரான முகமது இக்வான் ஹக்கிம் டாவுட் (வயது 21) கழுத்தில் காயங்களுக்குள்ளானார்.

அந்த கெலிசா காரில் பயணம் செய்த இரு பயணிகள் காயமின்றி உயிர்த் தப்பியதாக செத்தியு மாவட்ட போலீஸ் தலைவர் டி.எஸ்.பி. அப்பாண்டி ஹூசேன் கூறினார்.

கோல திரங்கானுவிலிருந்து வந்த அந்த 5 டன் லோரி பெசுட், கம்போங் ராஜாவுக்குள் நுழைவதற்காக சமிக்ஞை காட்டிய நிலையில் பின்னால் வந்த கெலிசா கார் அந்த சமிக்ஞையை கவனிக்காது அந்த லோரியை முந்த முயன்றதாக அவர் சொன்னார்.

அந்த  லோரியை முந்த முடியாத நிலையில் லோரியின் வலது புறத்தை கார் பலமாக மோதியது. இந்த மோதலின் விளைவாக லோரியும் காரும் தீப்பற்றிக் கொண்டன என்று அவர் மேலும் தெரிவித்தார்.

காரிலிருந்த இரு பயணிகள் விரைந்து வெளியேறிய நிலையில் நுருள் எமில்யா தப்ப இயலாத நிலையில் தீயில் சிக்கி கொண்டார். பின்னர் அவரது உடல் மீட்கப்பட்ட சவப்பரிசோதனைக்காக செத்தியு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்லப்பட்டது என்றார் அவர்.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.