ECONOMY

சிலாங்கூர் மாநில அரசின் இவ்வாண்டின் ஆலயங்களுக்கான முதல் கட்ட மானியத்தை ஆலய நிர்வாகங்கள் பெற்றன.

19 ஆகஸ்ட் 2022, 8:22 AM
சிலாங்கூர் மாநில அரசின் இவ்வாண்டின் ஆலயங்களுக்கான முதல் கட்ட மானியத்தை ஆலய நிர்வாகங்கள் பெற்றன.

ஷா ஆலம், 19 ஆகஸ்ட்: இந்த ஆண்டு கோயில் நிர்வாகத்திற்கு மொத்தம் 1.8 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

"இன்று, மாநில அரசிடமிருந்து உதவி பெறும் முதல் குழுவிடம் ஆலயங்களுக்கான மொத்தம் RM670,000 யை 71 கோவில் பிரதிநிதிகளிடம் வழங்கிய பின் பேசிய ஆட்சிக்குழு உறுப்பினர்.

சிலாங்கூர் மாநிலப் பௌத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிஸ்ட் சிறப்புக் குழுவின் (லிமாஸ்) இணைத் தலைவர், இந்த ஆண்டு இறுதி வரை உதவிகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும் என்றார்.

மாநிலப் பொருளாதார நடவடிக்கை கவுன்சில் (MTES) அறையில் நடந்த ஒப்படைப்பு விழாவிற்குப் பிறகு, "ஒவ்வொரு தகுதியுள்ள கோவிலுக்கும் அவர்களின் தேவைகளுக்கு ஏற்ப, மத நடவடிக்கைகள் உட்பட ஆலயங்களின் மேம்பாட்டுக்கு RM3,000 முதல் RM10,000 வரை வழங்கப்படும்" என்று வி கணபதிராவ் கூறினார்.

மே மாதம், லிமாஸ் கமிட்டியின் இணைத் தலைவர் டத்தோ டெங் சாங் கிம், 2009 முதல் இதுவரை இஸ்லாம் அல்லாத பிற மதச் சங்கங்களுக்கு RM69.4 மில்லியன் மாநில அரசால் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

மலேசியப் புள்ளியியல் துறையிலிருந்து பெறப்பட்ட மக்கள்தொகைத் தரவுகளின் அடிப்படையில் சிலாங்கூரில் உள்ள முக்கிய மதத்தைப் பின்பற்றுபவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஒதுக்கீடு பிரிக்கப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.