ECONOMY

பராமரிப்பாளர் பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தை திடீர் மரணம்

19 ஆகஸ்ட் 2022, 6:14 AM
பராமரிப்பாளர் பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தை திடீர் மரணம்

கோலாலம்பூர், ஆக 19- பராமரிப்பாளரின் பாதுகாப்பில் இருந்த நான்கு மாதக் குழந்தை திடீரென மரணமடைந்தது. இச்சம்பவம் அம்பாங், தாமான் செம்பாக்காக ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று நிகழ்ந்தது.

தொட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அந்த குழந்தையின் முகத்தை துணி மூடியிருந்ததாக அந்த குழந்தையை பராமரித்து வந்த 26 வயது இந்தோனிசியப் பெண் போலிசில் கொடுத்த வாக்குமூலத்தில் குறிப்பிட்டுள்ளார் என்று அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் ஏசிபி முகமது பாரூக் ஏஷாக் கூறினார்.

அந்த குழந்தை இறந்த நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டதாக கூறிய அவர், எனினும் மருத்துவமனையில் உயிர்காப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்ட்டன என்றார்.

அந்த குழந்தை பராமரிப்பாளர் நேற்றிரவு 10.30 மணியளவில் கைது செய்யப்பட்ட வேளையில் அவரை விசாரணைக்காக தடுத்து வைப்பதற்கான நீதிமன்றம் அனுமதி இன்று பெறப்பட்டதாக அவர் குறிப்பட்டார்.

அக்குழந்தையின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய அம்பாங் மருத்துவமனையில் சவப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். இச்சம்பவம் தொடர்பில் 2001 ஆம் ஆண்டு சிறார் சட்டத்தின் 31(1)(ஏ) பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனறார் அவர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.