ECONOMY

சட்டமன்றக் கூட்டத் தொடர்  நாளை முதல்  சிலாங்கூர் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும்

24 ஜூலை 2022, 9:30 AM
சட்டமன்றக் கூட்டத் தொடர்  நாளை முதல்  சிலாங்கூர் டிவியில் நேரடியாக ஒளிபரப்பாகும்

ஷா ஆலம், ஜூலை 24 - சிலாங்கூர் மாநில சட்டமன்றக் கூட்டத் தொடர் நாளை  25 முதல் ஆகஸ்ட் 5 வரை தினமும் காலை 9.30 மணி தொடங்கி சிலாங்கூர் டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படும் .

அவை விவாதங்கள் குறித்த தகவல்களை  மீடியா சிலாங்கூர் முகநூல் பக்கத்திலும் சிலாங்கூர்கினி, சிலாங்கூர்  ஜெர்னல், மாண்டரின் மற்றும் சிலாங்கூர் இன்று தமிழ்  இணையதளங்கள் வாயிலாகவும் அறிந்து கொள்ளலாம்.

மாநிலத்தின் பொருளாதாரத்தை வலுப்படுத்தி அடுத்த ஐந்தாண்டுகளுக்கு மக்களின் நலனை மேம்படுத்துவதை இலக்காக கொண்ட  முதல் சிலாங்கூர் திட்டம் (ஆர்.எஸ்.-1) புதன்கிழமை காலை 11.00 மணிக்கு தாக்கல் செய்யப்படும்.

பொருட்களின் விலை உயர்வு, விளையாட்டு வசதிகள், பேரிடர் தயார் நிலை மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான மாநில அரசின் முயற்சிகள் குறித்த விவாதங்கள் அவையில் இடம் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அது மட்டுமின்றி சுகாதாரம், பருவநிலை மாற்றம், சட்டவிரோத குப்பைகள் கொட்டுதல் மற்றும் மக்கள் நலன் போன்ற பிரச்சனைகளும் முன்னிலைப்படுத்தப்படும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.