ECONOMY

நாட்டில் நேற்று 4,816 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஒன்பது பேர் உயிரிழப்பு

24 ஜூலை 2022, 3:29 AM
நாட்டில் நேற்று 4,816 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஒன்பது பேர் உயிரிழப்பு

ஷா ஆலம், ஜூலை 24- நாட்டில் நேற்று 4,816 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். நேற்று முன்தினம் இந்த எண்ணிக்கை 3,880 ஆக இருந்தது.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து இந்நோய்க்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 46 லட்சத்து 48 ஆயிரத்து 921 ஆக உயர்வு கண்டுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

இந்நோயின் தீவிர பாதிப்பை எதிர்நோக்கியுள்ளவர்களின் எண்ணிக்கை ஆகும் 49,547 என அந்த அகப்பக்கம் குறிப்பிட்டது. அவர்களில் 47,932 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 31 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் 1,535 பேர் மருத்துவமனகளிலும் அவர்களில் 49 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்று அது கூறியது.

இந்நோய்த் தொற்றுக்கு நேற்று ஒன்பது பேர் பலியாகினர். இதனுடன் சேர்த்து இந்நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 35,911 ஆக உயர்ந்துள்ளது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.