ALAM SEKITAR & CUACA

கெஅடிலான் மாநாடு- 20 எம்.பி.பி. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2,665 பேராளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

16 ஜூலை 2022, 7:26 AM
கெஅடிலான் மாநாடு- 20 எம்.பி.பி. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 2,665 பேராளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்

ஷா ஆலம், ஜூலை 16- கெஅடிலான் கட்சியின் மத்திய தலைமைத்துவ மன்றத்திற்கான (எம்.பி.பி.) 20 உறுப்பினர்களைத் தேர்தெடுப்பதற்கு கட்சியின் 2,665 பேராளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.

இப்பதவிக்கான வாக்களிப்பு இன்று காலை 11.00 மணி தொடங்கி மாலை 6.00 மணி வரை நடைபெறும் என்று கெஅடிலான் கட்சியின் தேர்தல் குழுத் துணைத் தலைவர் சைபுல் இஸாம் ரம்லி கூறினார்.

வரும் 2022-2025 தவணைக்கான 20 எம்.பி.பி. உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு இன்றைய மாநாட்டில் கலந்து கொண்டுள்ள 2,665 பேராளர்கள் வாக்களிக்கவுள்ளனர் என்றார் அவர்.

வாக்களிப்பு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக நாங்கள் 100 கையடக்க கணினிகளை ஏற்பாடு செய்துள்ளோம். 2022 ஆம் ஆண்டு தேர்தலின் போது இந்த நடைமுறையை பயன்படுத்திய அனுபவம் பேராளர்களுக்கு இருக்கும் என நம்புகிறோம் என்று அவர் தேர்தல் நடைமுறை குறித்து பேராளர்களுக்கு விளக்கமளிக்கையில் குறிப்பிட்டார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.