ECONOMY

தென் கொரியாவில் மீண்டும் உயரும் கோவிட்-19 நோய்த் தொற்று- ஒரே நாளில் 10,715 பேர் பாதிப்பு

2 ஜூலை 2022, 7:52 AM
தென் கொரியாவில் மீண்டும் உயரும் கோவிட்-19 நோய்த் தொற்று- ஒரே நாளில் 10,715 பேர் பாதிப்பு

சியோல், ஜூலை 2- தென் கொரியாவில் புதிய கோவிட்-19 சம்பவங்களின் எண்ணிக்கை இன்று பத்தாயிரத்திற்கும் அதிகமாக பதிவானது. அண்மைய சில மாதங்களாக இறக்கம் கண்டு வந்த அந்நோய்த் தொற்று தற்போது மறுபடியும் விஸ்வரூபமெடுக்கத் தொடங்கியுள்ளது.

அந்நாட்டில் இன்று 10,715 கோவிட்-19 சம்பவங்கள் பதிவாகின. அதில் 173 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர்களிடம் அடையாளம் காணப்பட்டன. இதனுடன் சேர்த்து அந்நோய்த் தொற்றினால் பீடிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1 கோடியே 83 லட்சத்து 79 ஆயிரத்து 552 ஆக உயர்ந்துள்ளது.

தென் கொரியாவில் நேற்று நோய்த் தொற்று எண்ணிக்கை 9,528 ஆகவும் ஒரு வாரத்திற்கு முன்னர் 6,786 ஆகவும் இருந்ததாக அந்நாட்டு நோய்க் கட்டுப்பாட்டு நிறுவனம் கூறியது.

கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு புதிதாக எழுவர் பலியான வேளையில் இந்நோயினால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 24,562  ஆக உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் மாதம் மத்தியில் எப்போதும் இல்லாத அளவிற்கு அதாவது  உயர்வு கண்ட கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை பின்னர் படிப்படியாக குறைய ஆரம்பித்தது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.