ECONOMY

நாட்டில் நேற்று 1,894 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு- எண்மர் உயிரிழப்பு 

28 ஜூன் 2022, 4:35 AM
நாட்டில் நேற்று 1,894 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிப்பு- எண்மர் உயிரிழப்பு 

ஷா ஆலம், ஜூன் 28- நாட்டில் அண்மைய சில தினங்களாக இரண்டாயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வந்த கோவிட்-19 நோய்த் தொற்று எண்ணிக்கை நேற்று சற்று குறைந்து 1,894 ஆக ஆனது.

இம்மாதம் 22ஆம் தேதி 2,425 பேரும் 23ஆம் தேதி 2,796 பேரும் 24ஆம் தேதி 2,512 பேரும் 25ஆம் தேதி 2,302 பேரும் 26ஆம் தேதி 2,003 பேரும் இந்நோய்க்கு இலக்கானதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று பதிவான தொற்றுகளுடன் சேர்ந்து கோவிட்-19 நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 45 லட்சத்து 58 ஆயிரத்து 558 பேராக உயர்ந்துள்ளது.

நாட்டில் தற்போது 28,093 பேர் நோய்த் தொற்றின் தீவிரப் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளனர்.

அவர்களில் 26,894 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள வேளையில் 15 பேர் பி.கே.ஆர்.சி. எனப்படும் கோவிட்-19 சிகிச்சை மற்றும் தனிமைப்படுத்தும் மையத்திலும் 1,150 பேர் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 34 பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

நேற்று கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய எட்டு மரணச் சம்பவங்கள் நேற்று பதிவானது. இந்நோய்க்கு இதுவரைப் பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35,754 ஆக அதிகரித்துள்ளது.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.