ECONOMY

நாட்டில் நேற்று 2,033 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஐவர் மரணம்

17 ஜூன் 2022, 4:28 AM
நாட்டில் நேற்று 2,033 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு- ஐவர் மரணம்

ஷா ஆலம், ஜூன் 17- நாட்டில் நேற்று மொத்தம் 2,033 புதிய கோவிட்-19 நோய்த்தொற்றுகள் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து  நாட்டில் இந்நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 44 லட்சத்து 97 ஆயிரத்து 478 ஆக உயர்ந்துள்ளது.

நோய்த் தாக்கம் தீவிரமாக உள்ள நோயாளிகள் எண்ணிக்கை 24,577 ஆகும் என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

அவர்களில் 23,573 நோயாளிகள் வீட்டிலும் 13 பேர் கோவிட்-19 தனிமைப்படுத்தல் மற்றும் சிகிச்சை மையத்திலும் (பி.கே.ஆர் சி.) மற்றும் 959 நோயாளிகள் மருத்துவமனைகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், 14 நோயாளிகள் தீவிர சிகிச்சை பிரிவில்  சுவாச உதவி இல்லாமல் சிகிச்சை பெறும் வேளையில் 18 பேருக்கு சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.

கோவிட்-19 ,நோய்க்கு நேற்று ஐவர் பலியாகினர். அவர்களில் மூவர் மருத்துவமனைக்கு வெளியே மரணமடைந்தனர்.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.