NATIONAL

ஆகாயப் படையின் 64ஆம் ஆண்டு நிறைவு விழா- பேரரசர் வாழ்த்து

1 ஜூன் 2022, 4:52 AM
ஆகாயப் படையின் 64ஆம் ஆண்டு நிறைவு விழா- பேரரசர் வாழ்த்து

கோலாலம்பூர், ஜூன் 1- தனது 64ஆம் ஆண்டு நிறைவு விழாவை இன்று கொண்டாடும் அரச மலேசிய ஆகாயப் படைக்கு மாட்சிமை தங்கிய பேரரசர் அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துடின் அல்-முஸ்தாபா பில்லா ஷா தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளார்.

ஆகாயப்படையின் அனைத்து உறுப்பினர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் இப்படையில் சேவையாற்றியவர்கள் அனைவருக்கும் தாம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்வதாக இஸ்தானா நெகாராவின் அதிகாரப்பூர்வ பேஸ்புக் பக்கத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் வான் பகுதியின் இறையாண்மையைக் காப்பதில் அரச மலேசிய ஆகாயப் படை காட்டி வரும் அர்ப்பணிப்பு மற்றும் அயரா சேவை பெரிதும் மதிக்கக்கூடியது என்பதோடு போற்றுதலுக்கும் உரியது என மாமன்னர் கூறியுள்ளார்.

நாட்டின் ஆகாய மார்க்கத்தை காக்கக்கூடிய நவீன வான் படையாகவும் அனைத்துலக நிலையில் மதிக்கக்கூடிய படைப் பிரிவாகவும் ஆகாயப் படை தொடர்ந்து விளங்க தாம் வாழ்த்துவதாக அவர் அந்த வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.