ECONOMY

சீ போட்டியில் வாகை சூடிய சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு வெகுமதி- மாநில அரசு பரிசீலனை

15 மே 2022, 3:31 AM
சீ போட்டியில் வாகை சூடிய சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு வெகுமதி- மாநில அரசு பரிசீலனை

சுங்கை பூலோ, மே 15- வியட்னாமில் நடைபெற்று வரும் 31வது சீ போட்டியில் வாகை சூடிய சிலாங்கூர் விளையாட்டாளர்களுக்கு வெகுமதி வழங்குவது குறித்து மாநில அரசு பரிசீலித்து வருகிறது.

வெற்றியாளர்களுக்கு எத்தகைய வெகுமதியை வழங்குவது என்பது குறித்து மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரியுடன் விவாதிக்கப்படும் என்று இளைய தலைமுறையினர் மற்றும் மனித மூலதன மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் முகமது கைருடின் ஓத்மான் கூறினார்.

அப்போட்டியில் வெற்றி கண்ட விளையாட்டாளர்களுக்கு வெகுமதி வழங்கும் திட்டத்தைக் கொண்டிருக்கிறோம். அவர்கள் நாடு திரும்பியவுடன் அது குறித்து அறிவிப்போம் என்றார் அவர்.

சுக்மா விளையாட்டாளர்களை முன்பு கௌரவித்ததைப் போல் சீ விளையாட்டு வெற்றியாளர்களையும் கௌரவிக்க விருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

நேற்று இங்குள்ள புக்கிட் ரஹ்மான் புத்ராவில் ஒய்சுக்குரைடர்ஸ் அமைப்பினருடனான நோன்புப் பெருநாள் பொது உபசரிப்பில் பங்கேற்றப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

 

வகைsukankini

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.