ALAM SEKITAR & CUACA

ஓப் செலாமாட் இயக்கம்- சிலாங்கூரில் 1,943 விபத்துகள் பதிவு

5 மே 2022, 2:05 AM
ஓப் செலாமாட் இயக்கம்- சிலாங்கூரில் 1,943 விபத்துகள் பதிவு

ஷா ஆலம், மே 5- சிலாங்கூர் மாநிலத்தில் ஓப் செலாமாட் சாலை பாதுகாப்பு இயக்கத்தின் போது 1,943 விபத்துகள் பதிவு செய்யப்பட்டதாக மாநில  சாலை போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கப் பிரிவு கூறியது.

அவற்றில் 293 விபத்துகள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக அப்பிரிவின் தலைவர் சூப்ரிண்டெண்டன் அஸ்மாட் ஷரியாட் கூறினார்.

மொத்தம் 11 மரண விபத்துகள் பதிவாகியுள்ளதாக கூறிய அவர், விபத்துகளைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக சாலையை கவனமுடன் பயன்படுத்தும்படி வாகனமோட்டிகளைக்  கேட்டுக் கொண்டார்.

மாநிலத்திலுள்ள நகர்ப்புறச் சாலைகளில் போக்குவரத்து சீராக உள்ளது. எனினும், அதிக வாகனப் போக்குவரத்து காணப்படும் கோல சிலாங்கூர் பகுதியில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என்றார் அவர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.