கோலாலம்பூர், மே 4- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயதுக்குட்பட்ட சிறார்களில் மொத்தம் 87 லட்சத்து 2 ஆயிரத்து 058 பேர் அல்லது 24.6 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.பிக்கிட்ஸ் எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் 15 லட்சத்து 37 ஆயிரத்து 013 பேர் 43.3 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.
12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் மொத்தம் 28 லட்சத்து 94 ஆயிரத்து 793 பேருக்கு அல்லது 93 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்ட வேளையில் 29 லட்சத்து 92 ஆயிரத்து 466 பேர் அல்லது 96.1 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றதாக அது கூறியது.
பெரியவர்களில் 1 கோடியே 60 லட்சத்து 36 ஆயிரத்து 202 பேர் அல்லது 68.2 சதவீதம் பேர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுபூசியைப் பெற்றுள்ளனர். மேலும் 2 கோடியே 29 லட்சத்து 67 ஆயிரத்து 290 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 43 ஆயிரத்து 513 பேர் அல்லது 98.8 சதவீதம் பேர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றுள்ளனர்.
நேற்று மொத்தம் 1,473 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இதன்வழி தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் (பிக்) மூலம் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 7 கோடியே 03 லட்சத்து 90 ஆயிரத்து 329 ஆக உயர்ந்துள்ளது.
இதற்கிடையே, கோவிட்-19 தொடர்புடைய நேற்று 9 மரணச் சம்பவங்கள் பதிவானதாக காதார அமைச்சின் கிட்ஹப் அகப்பக்கம் கூறியது.
ALAM SEKITAR & CUACA
872,058 சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றனர்
4 மே 2022, 6:53 AM
Suka
Marah
Sedih
Lucu
Tidak Suka
தொடர்புடைய செய்திகள்
national
6 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
29 ஜூலை 2025

national
7 மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை
Shalini Rajamogun
22 ஜூலை 2025

national
உலு சிலாங்கூரில் இடியுடன் கூடிய கனமழை எச்சரிக்கை
Shalini Rajamogun
7 ஜூலை 2025

selangor
மந்திரி புசார்- சிலாங்கூர் வளர்ச்சி திட்டம் RS-2 அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்படும்
n.pakiya
29 ஜூலை 2025

உங்கள் கருத்து என்ன?




