ALAM SEKITAR & CUACA

வீடு தீப்பிடித்து எரிந்ததில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி படுக்கையறையில் !

1 மே 2022, 3:40 AM
வீடு தீப்பிடித்து எரிந்ததில், சங்கிலியால் பிணைக்கப்பட்ட மாற்றுத்திறனாளி சிறுமி படுக்கையறையில் !

சரடோக், மே 1: சரடோக்கின் ஜாலான் அபாங் ஹ்ஜே புத்தே அலியாஸ், கம்போங் தஞ்சோங் உலுவில் இன்று இரவு 12 வயது மாற்றுத்திறனாளி சிறுமி (OKU) சங்கிலியால் பிணைக்கப்பட்ட நிலையில் உடல் கருகிக் காணப்பட்டார்.

சரவாக் தீயணைப்பு மற்றும் மீட்பு நடவடிக்கை மையத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், வீட்டில் உள்ள அறை ஒன்றில் அலீஸ்யா மட் அலியின் உடல் கண்டெடுக்கப்பட்டது , என்றார்.

அவர் கூறுகையில், நேற்று இரவு 8.18 மணிக்குத் தீ விபத்து குறித்து அவரது தரப்புக்குத் தகவல் கிடைத்தது, சரடோ தீயணைப்பு மற்றும் மீட்பு நிலைய உறுப்பினர்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பப் பட்டனர்.

"நிரந்தரமற்ற இரண்டு மாடி வீடு தீ விபத்துக்குள்ளானது மற்றும் 100 சதவீதம் எரிந்துவிட்ட அதில் பாதிக்கப்பட்ட 12 வயது OKU சிறுமி உடல் கருகிப் படுக்கையறையில் காணப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

"இரவு 8.45 மணிக்கு நிலைமை கட்டுப்பாட்டில் வந்தது," என்று அவர் இன்று இரவு ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

-பெர்னாமா

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.