ALAM SEKITAR & CUACA

சிலாங்கூர், கோலாலம்பூரின் சில மாவட்டங்களில் இரவு 8.00 மணி வரை மழை பெய்யும்

27 ஏப்ரல் 2022, 12:47 PM
சிலாங்கூர், கோலாலம்பூரின் சில மாவட்டங்களில் இரவு 8.00 மணி வரை மழை பெய்யும்

ஷா ஆலம், ஏப் 27- சிலாங்கூர் மாநிலத்தின்  உலு சிலாங்கூர், கோம்பாக், பெட்டாலிங் மற்றும் உலு லங்காட்டிலும் கோலாலம்பூரிலும் இன்றிரவு 8.00 மணி வரை பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய கனத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுத் துறை கணித்துள்ளது.

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் ரெம்பாவ், ஜொகூர் மாநிலத்தின் பத்து பகாட், கூலாய், கோத்தா திங்கி, பேராக் மாநிலத்தின் கோல கங்சார், கிந்தா, கம்பார், பாத்தாங் பாடாங், முவாலிம், பகாங் மாநிலத்தின் கேமரன் மலை, லிப்பிஸ், ராவுப், ஜெராண்டூட், பெந்தோங், தெமர்லோ மாரான் குவாந்தான், பெக்கான் ஆகிய இடங்களிலும் இதே நிலை நீடிக்கும் என அது கூறியது.

சரவா மாநிலத்தின் சரிக்கேய், சிபு மற்றும் சோங் ஆகிய இடங்களும் சபா மாநிலத்தின் சிப்பித்தாங், தெனோம், கோல பென்யூ, பியூபோர்ட், நபாவான், கெனிங்காவ், தாவாவ், தோங்கோட்  ஆகிய இடங்களில்  வானிலை மோசமாக இருக்கும் என அத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

வகைeconomy

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.