ஷா ஆலம், ஏப்ரல் 26: ஹரி ராயா பெருநாளைக் கொண்டாடுவதற்கு வசதியற்றவர்களின் சுமையைக் குறைக்க உதவும் வகையில், மாநில அரசு ஜோம் ஷாப்பிங் ராயா மூலம் RM33.4 லட்சத்தை ஒதுக்கீடு செய்துள்ளது.
இந்த ஒதுக்கீட்டில் மாநிலம் முழுவதும் 33,400 பேர் ஈடுபட்டுள்ளதாக டத்தோ மந்திரி புசார், டத்தோ' ஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
பொருட்களின் விலையேற்றத்தை தொடர்ந்து மக்களுக்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமையை அரசாங்கம் உணர்ந்தே இந்த முயற்சியை நடைமுறைப்படுத்தியதாக அவர் கூறினார்.
“இந்த ஆண்டு ஹரி ராயா பெருநாளுக்கு, 33,400 சிலாங்கூர் குடிமக்களுக்கு அடிப்படைத் தேவைகளை வாங்குவதற்கு பற்றுச் சீட்டுகளை வழங்குவதன் மூலம் மொத்தம் RM33.4 லட்சத்தை ஒதுக்கப்பட்டுள்ளது.
"ஈத் பண்டிகையைக் கொண்டாடத் தேவைப்படும் குடும்பங்களின் சுமையைக் குறைக்கும் வகையில், 56 மாநில சட்டமன்றம் மூலம் இது அனுப்பப்படுகிறது" என்று அவர் பேஸ்புக்கில் தெரிவித்தார்.
ஏப்ரல் 8 அன்று, சம்பந்தப்பட்ட அரசாங்க ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. கணபதிராவ், ஒவ்வொரு RM100 மதிப்புள்ள பற்றுச் சீட்டுகள் ஏப்ரல் 1 முதல் இம்மாத இறுதி வரை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மூலம் அனுப்பப்பட்டதாக விளக்கினார்.
மக்களின் நலன் மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்கான நீண்ட கால முயற்சியாக பி40 குழுவை இலக்காகக் கொண்டு ஜோம் ஷாப்பிங் ராயா மாநில அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது.








