ECONOMY

இ.பி.எஃப் சிறப்பு பண மீட்பு ஏப்ரல் 28 முதல் விண்ணப்பித்தவர்களுக்கு மே 5 முதல் வங்கி கணக்கில் செலுத்தப்படும்

24 ஏப்ரல் 2022, 12:01 PM
இ.பி.எஃப் சிறப்பு பண மீட்பு ஏப்ரல் 28 முதல் விண்ணப்பித்தவர்களுக்கு மே 5 முதல் வங்கி கணக்கில் செலுத்தப்படும்

ஷா ஆலம், ஏப்ரல் 24: ஏப்ரல் 28 முதல் ஏப்ரல் 30 வரை விண்ணப்பித்த ஊழியர் சேம நிதியின் (இ.பி.எஃப்.) சிறப்பு பணமீட்பு மே 5 முதல் வழங்கப்படும்.

இந்த விவகாரம் இன்று பிற்பகல் இ.பி.எஃப். இன் ட்விட்டர் மூலம் தெரிவிக்கப்பட்டது.

https://pengeluarankhas.kwsp.gov.my இல் உள்ள சிறப்பு பண மீட்பு போர்டல் மூலம் விண்ணப்பங்கள் மற்றும் நிலை சரிபார்ப்புகளை மேற்கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

முன்னதாக, நிதியமைச்சர் சிறப்பு பண மீட்பு   கட்டம்  கட்டங்களாக மேற்கொள்ளப்  பட்டதாகவும், ஹரி ராயா பெருநாளுக்கு முன் வழங்கப் படுவதாகவும் கூறினார்.

53 லட்சம் தனிநபர்களை உள்ளடக்கிய அதிக விண்ணப்பங்கள் காரணமாகக் குறுகிய காலத்தில் RM401 கோடி விநியோகம் செய்வது கடினமாக இருந்தது என்று டத்தோஸ்ரீ தெங்கு ஜஃப்ருல் தெங்கு அப்துல் அஜீஸ் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.