உலு லங்காட், ஏப் 17- நாட்டை மேம்படுத்துவதற்கு ஏதுவாக அறிவாற்றல்மிக்க சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில் கல்வித் துறையின் வளர்ச்சி மீது மாநில அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது.
இந்த இலக்கை அடைவதற்காக உலகின் தலைசிறந்த உயர்கல்விக் கூடங்களுக்கு மாணவர்களை அனுப்பும் பரிந்துரை உள்ளிட்ட திட்டங்களை மாநில அரசு மேற்கொண்டு வருவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.
உள்நாட்டில் அல்லது வெளிநாடுகளில் உள்ள அரசாங்க மற்றும் தனியார் உயர்கல்விக் கூடங்களில் மாநிலத்திலுள்ள மாணவர்கள் உயர் கல்வி பெறுவதற்கு ஏதுவாக உபகாரச் சம்பளம் வழங்குவது குறித்து நேற்று நாங்கள் விவாதித்தோம்.
சில தினங்களுக்கு முன்னர்கூட மொழிபெயர்ப்பு மீதான செயல் திட்டத்தை வரைந்தோம். கடந்தாண்டில் அபு பாக்கார் சிராஜூடின் என்பவர் மூலம் நாம் முகமதுவின் வாழ்க்கை வரலாற்றை மொழி பெயர்தோம். இவ்வாண்டும் அப்பணிகளை தொடரவிருக்கிறோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.








