ALAM SEKITAR & CUACA

தாமான் புக்கிட் பெர்மாய்  நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் வெ.135,000  நிதியுதவி பெற்றனர்

17 ஏப்ரல் 2022, 3:48 AM
தாமான் புக்கிட் பெர்மாய்  நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்கள் வெ.135,000  நிதியுதவி பெற்றனர்

அம்பாங், ஏப் 17 - தாமான் புக்கிட் பெர்மாய் 1 மற்றும் 2 இல் ஏற்பட்ட நிலச்சரிவு சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 91 குடும்பங்களுக்கு 135,000 வெள்ளி நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது.

அந்த உதவி நிதியில் 100,000 வெள்ளி எம்பி.ஐ. எனப்படும்  மந்திரி பெசார் கழகத்தின் வாயிலாகவும்  எஞ்சிய 35,000 வெள்ளி மாநில பேரிடர் நிதியிலிருந்தும் வழங்கப்பட்டது என்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற மாநில ஆட்சிக்குழு கூட்டத்தில் இந்த நிதியுதவிக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

அந்த நிலச்சரிவு சம்பவத்தில் உயிரிழந்த மற்றும் காயமடைந்தவர்களின் குடும்பங்களுக்கும்  வீடுகள் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இந்த உதவித் தொகை வழங்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு 10,000 வெள்ளி வழங்கப்படும் வேளையில் காயமடைந்த குடியிருப்பாளர்களுக்கும் வீடுகள் சேதமடைந்தவர்களுக்கும்  5,000 வெள்ளியும் வழங்கப்படுகிறது.

வீடுகளைக் காலி உத்தரவிடப்பட்ட 70 குடியிருப்பாளர்கள் ஆறுதல் நிதியாக 500 வெள்ளி பெறுவார்கள்.

இந்த நன்கொடை பாதிக்கப்பட்டவர்களின் சுமையை குறைக்க உதவும் என மாநில அரசு நம்புகிறது  என்று அவர் இன்று செராஸ் பாருவில் உள்ள எம்.பி.ஏ.ஜே  மண்டபத்தில் நடைபெற்ற உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சியில் உரையாற்றும் போது அவர் சொன்னார்.

கடந்த மார்ச் 11 ஆம் தேதி அம்பாங், தாமான் புக்கிட் பெர்மாய் 2 இல் நிலச்சரிவில் நிகழ்ந்த நிலச்சரிவில்  நால்வர் கொல்லப்பட்டதோடு ஒருவர் காயமடைந்தார். மேலும், 15 வீடுகள் மற்றும் 10 வாகனங்கள் சேதமடைந்தன

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.