ECONOMY

நாட்டில் 67.6 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

10 ஏப்ரல் 2022, 5:11 AM
நாட்டில் 67.6 விழுக்காட்டுப் பெரியவர்கள் கோவிட்-19  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்

கோலாலம்பூர், ஏப் 10- நேற்று வரை நாட்டிலுள்ள பெரியவர்களில் 67.6 விழுக்காட்டினர் அல்லது 1 கோடியே 59 லட்சத்து 15 ஆயிரத்து 493 பேர் பூஸ்டர் எனப்படும்  ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்..

மேலும், 97.6 விழுக்காட்டினர் அல்லது 2 கோடியே 29 லட்சத்து 56 ஆயிரத்து 764 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 2 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 706 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக   சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

நேற்று நாடு முழுவதும் 40,792  பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. அவர்களில் 6,401 பேர் முதல் டோஸ் தடுப்பூசியையும் 27,716 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 6,675 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை 104,250  சிறார்கள் இரண்டு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர். 5 முதல் 11 வயது வரையிலான அச்சிறார்களில் 38.4 விழுக்காட்டினர் அல்லது 13 லட்சத்து 63 ஆயிரத்து 134 பேர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியை செலுத்திக் கொண்டனர்.

இதனிடையே, 12 முதல் 17 வயது வரையிலான சிறார்களில் 91.9 விழுக்காட்டினர் அல்லது 28 லட்சத்து 59 ஆயிரத்து 026 பேர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் மேலும் 92.1 விழுக்காட்டினர் அல்லது 29 லட்சத்து 60 ஆயிரத்து 123 பேருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்டத் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 91 லட்சத்து 80 ஆயிரத்து 021 ஆக உயர்வு கண்டுள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 21 மரணங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.