ECONOMY

5 முதல் 11 வயது வரையிலான 77,834 சிறார்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது

9 ஏப்ரல் 2022, 10:06 AM
5 முதல் 11 வயது வரையிலான 77,834 சிறார்களுக்கு முழுமையாக தடுப்பூசி போடப்பட்டது

கோலாலம்பூர், ஏப்ரல் 9: மலேசியாவில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த் தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 77,834 பேர் நேற்று முழுமையாக கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி, மொத்தம் 13 லட்சத்து 58 ஆயிரத்து 791 சிறார்கள் அல்லது 38.3 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில் மொத்தம் 28 லட்சத்து 57 ஆயிரத்து 568 பேர் அல்லது 91.8 விழுக்காட்டினர் முழுமையாக தடுப்பூசியை பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 58 ஆயிரத்து 121 பேர் அல்லது 95 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

இதற்கிடையில், மொத்தம் 1 கோடியே 59 லட்சத்து 08 ஆயிரத்து 442 பேர் அல்லது 67.6 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் ஊசிகளைப் பெற்றனர், 2 கோடியே 29 லட்சத்து 56 ஆயிரத்து 433 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் இரண்டு டோஸ்களைப் முழுமையாக பெற்றுள்ளனர், 2 கோடியே 32 லட்சத்து 33 ஆயிரத்து 304 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

6,355 முதல் டோஸ்கள், 20,260 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 8,289 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 34,904 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்) கீழ் கொடுக்கப்பட்ட மொத்த டோஸ்கள் எண்ணிக்கை 6 கோடியே 91 லட்சத்து 38 ஆயிரத்து 021 ஆகக் உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நாட்டில் கோவிட்-19 காரணமாக 31 இறப்புகள் நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.