கோலாலம்பூர், மார்ச் 31: மலேசியாவில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதுக்குட்பட்ட மொத்தம் 1,323,892 சிறார்கள் அல்லது 37.3 விழுக்காட்டினர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
கோவிட்நவ் இணையதளத்தின் தரவுகளின் அடிப்படையில், 12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 51 ஆயிரத்து 56 பேர் அல்லது 91.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 29 லட்சத்து 47 ஆயிரத்து 622 பேர் அல்லது 94.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
வயது வந்தோரில் மொத்தம் 1 கோடியே 57 லட்சத்து 58 ஆயிரத்து 429 பேர் அல்லது 67 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் மற்றும் 2 கோடியே 29 லட்சத்து 52 ஆயிரத்து 209 பேர் அல்லது 97.6 விழுக்காட்டினர் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், 2 கோடியே 32 கோடியே 28 ஆயிரத்து 125 பேர் அல்லது 98.8 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.
4,949 முதல் டோஸ்கள், 1,438 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 45,480 பூஸ்டர் டோஸ் ஊசிகளை உள்ளடக்கிய மொத்தம் 51,867 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 6 கோடியே 88 லட்சத்து 49 ஆயிரத்து 462 ஆக அதிகரித்துள்ளது.
இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று 33 இறப்புகள் பதிவாகியுள்ளன.







