ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை

30 மார்ச் 2022, 9:50 AM
சிலாங்கூரில் பல மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என எச்சரிக்கை

ஷா ஆலம், மார்ச் 30: சிலாங்கூரில் உள்ள சபாக் பெர்ணாம், கோலா சிலாங்கூர் மற்றும் உலு சிலாங்கூர் மாவட்டங்களுக்கு இன்று  இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் (மெட்மலேசியா) எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதே எச்சரிக்கையில் ஜெலுபு, நெகிரி செம்பிலான்; ஜோகூரில் செகாமாட், குளுவாங் மற்றும் மெர்சிங்; பகாங்கில் கேமரூன் மலை, லிபிஸ், ராவுப் மற்றும் பெந்தோங்; பேராக்கில் கெரியன், லாரூட், மாதாங் மற்றும் செலாமா, கோலா கங்சார், கிந்தா, பேராக் தெங்கா, கம்பார், ஹிலிர் பேராக், பாத்தாங் பாடாங் மற்றும் முவாலிம்; பினாங்கில் செபெராங் பென்னாய் செல்லாதான் மற்றும் கடாவில் பாலிங், கூலிம் மற்றும் பண்டார் பாரு.

மெட்மலேசியாவின் கூற்றுப்படி, இடியுடன் கூடிய மழைப்பொழிவு ஒரு மணி நேரத்திற்கு 20 மில்லிமீட்டர் (மிமீ/மணி நேரம்) அதிகமாக இருக்கும் என எச்சரிக்கைகள் விடுக்கப்படுகின்றன.

இடியுடன் கூடிய மழை முன்னறிவிப்பு என்பது ஒரு குறுகிய கால எச்சரிக்கையாகும், இது ஒரு வெளியீட்டிற்கு ஆறு மணிநேரத்திற்கு மிகாமல் இருக்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.