ECONOMY

நாட்டின் 36 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

26 மார்ச் 2022, 6:10 AM
நாட்டின் 36 விழுக்காட்டுக்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றனர்

கோலாலம்பூர், மார்ச் 26: நாட்டில் சிறார்களுக்கான தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் மொத்தம் 1,293,762 பேர் அல்லது 36.4 விழுக்காடு நேற்று தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில், 12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 28 லட்சத்து 47 ஆயிரத்து 758 பேர் அல்லது 91.5 விழுக்காட்டினர் முழுமையாகப் பெற்றுள்ள வேளையில் 29 லட்சத்து 44 ஆயிரத்து 865 பேர் அல்லது 94.6 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

நாட்டில் மொத்தம் 1 கோடியே 55 லட்சத்து 95 ஆயிரத்து 578 தனிநபர்கள் அல்லது 66.3 விழுக்காட்டினர் பூஸ்டர் டோஸ் மற்றும் 2 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரத்து 925 அல்லது 97.5 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசிகளைப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 24 ஆயிரத்து 65 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12,567 முதல் ஊசிகள், 1,297 இரண்டாவது ஊசிகள் மற்றும் 19,170 பூஸ்டர் டோஸ் ஊசிகள் உட்பட மொத்தம் 33,034 தடுப்பூசிகள் நேற்று வழங்கப்பட்டன, தேசிய கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் ஒட்டுமொத்த தடுப்பூசியின் எண்ணிக்கை 6 கோடியே 86 லட்சத்து 42 ஆயிரத்து 700 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சின் கிட்ஹப் போர்ட்டலின் படி, நேற்று கோவிட்-19 காரணமாக 52 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.