ECONOMY

நாட்டில் 33 விழுக்காட்டிற்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுகின்றனர்

15 மார்ச் 2022, 11:20 AM
நாட்டில் 33 விழுக்காட்டிற்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸைப் பெறுகின்றனர்

கோலாலம்பூர், மார்ச் 15: சிறார்களுக்கான தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் மூலம் 5 முதல் 11 வயதினரில் மொத்தம் 1,180,323 அல்லது 33.2 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளத்தின்படி நேற்று 12 முதல் 17 வயதுடைய இளையோரில் மொத்தம் 28 லட்சத்து 38 ஆயிரத்து 292 பேர் அல்லது 91.2 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 29 லட்சத்து 38 ஆயிரத்து 106 பேர் அல்லது 94.4 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

மொத்தம் 1 கோடியே 53 லட்சத்து 17 ஆயிரத்து 615 பேர் அல்லது 65.1 விழுக்காட்டினர் கோவிட்-19 இன் பூஸ்டர் டோஸைப் பெற்றுள்ளனர், மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 36 ஆயிரத்து 715 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 2 கோடியே 32 லட்சத்து 13 ஆயிரத்து 16 பேர் அல்லது 98.7 பேர் விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.

தினசரித் தடுப்பூசிகள் நேற்று 14,496 முதல் டோஸ்கள், 2,055 இரண்டாவது டோஸ்கள் மற்றும் 35,247 பூஸ்டர் டோஸ்கள் என மொத்தம் 51,798 தடுப்பூசிகள் வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்பு கீழ்க் கொடுக்கப்பட்ட ஒட்டுமொத்தத் தடுப்பூசி எண்ணிக்கை 6 கோடியே 82 லட்சத்து 14 ஆயிரத்து 783 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட் -19 காரணமாக நேற்று 92 இறப்புகள் பதிவாகியுள்ளன.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.