ALAM SEKITAR & CUACA

குடியிருப்பு பகுதிகளில்  தூய்மையை உறுதி செய்ய இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி – கே.டி.இ.பி.எம்.டபள்யூ தகவல்

13 மார்ச் 2022, 5:36 AM
குடியிருப்பு பகுதிகளில்  தூய்மையை உறுதி செய்ய இரண்டாம் கட்ட துப்புரவுப் பணி – கே.டி.இ.பி.எம்.டபள்யூ தகவல்

ஷா ஆலம், மார்ச் 13- பி.கே.ஜே. 52 மண்டலத்தில 2022 ஆம் ஆண்டிற்கான இரண்டாம் கட்ட துப்பரவுப் பணியை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனேஜ்மேண்ட் நிறுவனம் நேற்று மேற்கொண்டது.

காஜாங் தென் பிராந்தியத்தில் இந்த துப்புரவுப் பணி மேற்கொள்ளப்பட்டது. இந்த மண்டலத்தில் குப்பைகளை அகற்றுவதில் பொது மக்கள் மற்றும் குத்தகையாளர்களின் சுமையைக் குறைக்கும் நோக்கில் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அந்நிறுவனம் தனது பேஸ்புக் பக்கத்தில் கூறியது.

இந்த மாபெரும் துப்புரவு இயக்கம் ஒருங்கிணைந்த முறையில் மேற்கொள்ளப்பட்டது. ஆறு லோரிகளைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட இப்பணியின் வழி அப்பகுதியில் குவிந்த குப்பைகயின் அளவைக் குறைக்க முடிந்ததாக அது குறிப்பிட்டது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தாமான் புவானா, பெட்டாலிங் ஜெயா ஆகிய பகுதிகளில் துப்புரவுப் பணியை கும்புலான் டாருள் ஏசான் வேஸ்ட் மேனெஜ்மெண்ட் நிறுவனம் கடந்த 11 ஆம் தேதி தொடக்கியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.