ECONOMY

பிளஸ் நிறுவனம் 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி தகவலை மறுத்தது

12 மார்ச் 2022, 4:45 AM
பிளஸ் நிறுவனம் 50 விழுக்காடு கட்டணத் தள்ளுபடி தகவலை மறுத்தது

கோலாலம்பூர், மார்ச் 12: ஜோகூர் மாநிலத் தேர்தலில் வாக்களிக்கத் திரும்புவோருக்கு 50 விழுக்காடு சுங்கச் சலுகை வழங்குவது குறித்த ஊடக அறிக்கைக்கும் தங்களுக்கும்  தொடர்பில்லை  என பிளஸ் மலேசியா பெர்ஹாட் (பிளஸ்) மறுத்துள்ளார்.

மேலும், நிறுவனத்தின் லோகோவைப் பயன்படுத்திப் பொதுமக்களைக் குழப்பும் செயலைத் தனது தரப்பு  கடுமையான விவகாரமாகக் கருதுவதாக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சம்பந்தப்பட்ட நபர்கள் மற்றும் தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுடன் இணைந்து செயல்படுவதாகவும் நெடுஞ்சாலை சலுகை நிறுவனம் தெரிவித்துள்ளது.

முன்னதாகப் பரவிய ஒரு அறிக்கையில், ஜோகூர் மாநிலத் தேர்தலை முன்னிட்டு   நாட்டின் தெற்குப் பகுதிக்கான அனைத்துப் பயணங்களுக்கும் மார்ச் 11ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் 50 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படும் என்று தெரிவிக்கின்றன.

 

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.