ALAM SEKITAR & CUACA

கம்போங் பாருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட நன்கொடைகளை அகோங் வழங்கினார்

9 மார்ச் 2022, 3:25 AM
கம்போங் பாருவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட நன்கொடைகளை அகோங் வழங்கினார்

கோலாலம்பூர், மார்ச் 9: யாங் டி-பெர்துவான் அகோங் அல்-சுல்தான் அப்துல்லா ரியாதுதீன் அல்-முஸ்தபா பில்லா ஷா, இங்கே கம்போங் பாருவில் உள்ள டேவான் கிளாப் சுல்தான் சுலைமானில் உள்ள தற்காலிக தங்கும் மையத்தில் (பிபிஎஸ்) தங்க வைக்கப்பட்டிருக்கும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தனிப்பட்ட நன்கொடைகளை வழங்க ஒப்புக்கொண்டார்.

இஸ்தானா நெகாரா தனது அதிகாரப்பூர்வப் பேஸ்புக் பக்கத்தில் ஒரு பகிர்வு மூலம், மாட்சிமையின் இராணுவப் பொறியாளர் பிரிகேடியர் ஜெனரல் டத்தோ ஷரிசான் வான் சிக்  மாமன்னரை பிரதிநிதித்து அந்த நன்கொடையை  வழங்கினார் என்று தெரிவித்தது..

அந்த அறிக்கையின்படி, “இந்த உதவி, ஓரளவு வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் சுமையைக் குறைக்க உதவும் என்று அவரது மாட்சிமை நம்பிக்கையை வெளிப்படுத்தியது".

நேற்று, கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பல பகுதிகள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டன, இதனால் பாதிக்கப்பட்ட குடியிருப்பாளர்கள் பிபிஎஸ்க்கு வெளியேற்றப் பட்டனர்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.