ECONOMY

சினோவேக் தடுப்பூசி பெற்றவர்கள்  மார்ச் 31 க்குள் ஊக்கத் தடுப்பூசி பெறவேண்டும்

25 பிப்ரவரி 2022, 3:57 AM
சினோவேக் தடுப்பூசி பெற்றவர்கள்  மார்ச் 31 க்குள் ஊக்கத் தடுப்பூசி பெறவேண்டும்

ஷா ஆலம், பிப் 25-  சினோவேக் தடுப்பூசி பெற்ற 18 வயதுக்கும் மேற்பட்டவர்கள் ஊக்கத் தடுப்பூசி பெறுவதற்கான காலக் கெடுவை மார்ச் 31 ஆம் தேதி வரை நீட்டிக்க சுகாதார அமைச்சு  ஒப்புதல் அளித்துள்ளது.

தடுப்பூசி முழுமையாகச் செலுத்தப்பட்டதற்கான அங்கீகாரத்தைப் பெறுவதற்கு ஏதுவாக வரும் பிப்ரவரி 28 ஆம் தேதிக்குள் ஊக்கத் தடுப்பூசியைப் பெற அத்தரப்பினருக்கு  முன்னதாக கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அனைத்து வகையான தடுப்பூசிகளையும் இரண்டு டோஸ் முழுமையாகப் பெற்ற 60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும்.

ஊக்கத் தடுப்பூசியை பெறாத பட்சத்தில் தடுப்பூசியை முழுமையாகப் பெற்றதைக் காட்டும் தடுப்பூசிச் சான்றிதழ் வரும் ஏப்ரல் முதல் தேதி தொடங்கி தடுப்பூசி முழுமைப் பெறவில்லை எனக் காட்டும்.

வகைnational

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.