ECONOMY

நாடு முழுவதும் 600,000க்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுகின்றனர்

24 பிப்ரவரி 2022, 1:16 PM
நாடு முழுவதும் 600,000க்கும் அதிகமான சிறார்கள் கோவிட்-19 தடுப்பூசியைப் பெறுகின்றனர்

கோலாலம்பூர், பிப் 24: நாட்டில் தேசியச் சிறார்கள் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்தின் (பிக்கிட்ஸ்) மூலம் நேற்று 5 முதல் 11 வயதுடைய சிறார்களில் 661,752 பேர் அல்லது மக்கள் 18.6 விழுக்காட்டினர் முதல் டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

கோவிட்நவ் இணையதளம் மூலம் தரவுகளின் அடிப்படையில், நாட்டில் மொத்தம் 1 கோடியே 42 லட்சத்து 74 ஆயிரத்து 843 பேர் அல்லது 60.7 விழுக்காட்டினர் கோவிட்-19 ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர் மற்றும் மொத்தம் 2 கோடியே 29 லட்சத்து 46 ஆயிரத்து 57 பேர் அல்லது 97.5 விழுக்காட்டினர் முழுமையான தடுப்பூசியைப் பெற்றுள்ளனர், 2 கோடியே 32 லட்சத்து 24 ஆயிரத்து 993 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

12 முதல் 17 வயதுடைய இளையோரில், மொத்தம் 27 லட்சத்து 99 ஆயிரத்து 485 பேர் அல்லது 90 விழுக்காட்டினர் தடுப்பூசிகளை முழுமையாகப் பெற்றுள்ளனர், அதே நேரத்தில் 28 லட்சத்து 89 ஆயிரத்து 543 பேர் அல்லது 92.9 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் ஒரு டோஸ் தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

47,876 முதல் டோஸ் ஊசிகள், 493 இரண்டாவது டோஸ் ஊசிகள் மற்றும் 95,380 பூஸ்டர் டோஸ் ஊசிகள் உட்பட மொத்தம் 143,749 தடுப்பூசி ஊசிகள் நேற்று வழங்கப்பட்டன, இது தேசியக் கோவிட்-19 நோய்த்தடுப்புத் திட்டத்திற்கான தடுப்பூசிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 6 கோடியே 65 லட்சத்து 89 ஆயிரத்து 636 ஆக உயர்ந்தது

இதற்கிடையில், சுகாதார அமைச்சகத்தின் கிட்ஹப் போர்ட்டலின் படி, கோவிட்-19 காரணமாக நேற்று 55 இறப்புகள் பதிவாகியுள்ளன.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.