ALAM SEKITAR & CUACA

சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

24 பிப்ரவரி 2022, 6:30 AM
சிலாங்கூரில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டுள்ளது

ஷா ஆலம், பிப் 24: மாநிலத்தின் 5 மாவட்டங்களில் காலை 11 மணி வரை இடியுடன் கூடிய கனமழை மற்றும் பலத்த காற்று வீசும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.

மலேசிய வானிலை ஆய்வு மையத்தின் (மெட்மலேசியா) கணிப்பின்படி, கோலா சிலாங்கூர், கிள்ளான், பெட்டாலிங், கோல லங்காட் மற்றும் உலு லங்காட் ஆகிய ஐந்து மாவட்டங்கள் ஆகும்.

கோலாலம்பூர் மற்றும் ஜொகூரில் உள்ள பல மாவட்டங்களான பத்துப் பகாட், பொந்தியன், கூலாய், கோத்தா திங்கி மற்றும் ஜோகூர் பாரு ஆகிய பகுதிகளிலும் மோசமான வானிலை ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஏறக்குறைய மணிக்கு 20 மில்லி மீட்டர் அளவு இடியுடன் கூடிய அடை மழை பெய்வதற்கான அறிகுறிகள் தென்படுவதாக எச்சரிக்கைகள் வழங்கப்படுகின்றன.

வகைhealth

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.