ECONOMY

நேற்று வரை சுமார் 340,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

18 பிப்ரவரி 2022, 2:42 AM
நேற்று வரை சுமார் 340,000 சிறார்களுக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டது

கோலாலம்பூர், பிப் 18- நாட்டிலுள்ள 5 முதல் 11 வயது வரையிலான சிறார்களில் 9.6 விழுக்காட்டினர் அல்லது 341,960 பேர் முதலாவது டோஸ் கோவிட்-19 தடுப்பூசியைப் பெற்றுள்ளனர்.

“பிக்கிட்ஸ்“ எனப்படும் சிறார்களுக்கான தேசிய தடுப்பூசித் திட்டத்தின் கீழ் நேற்று வரை இத்தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதாக சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது.

மேலும், நாட்டில் நேற்று வரை 1 கோடியே 37 லட்சத்து 28 ஆயிரத்து 147 பேர் அல்லது 58.3 விழுக்காட்டினர் பூஸ்டர் எனப்படும் ஊக்கத் தடுப்பூசியைப் பெற்றனர்.

அதோடு 2 கோடியே 29 லட்சத்து 41 ஆயிரத்து 779 பெரியவர்கள் அல்லது 97.5 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியையும் 2 கோடியே 32 லட்சத்து 18 ஆயிரத்து 655 பேர் அல்லது 98.7 விழுக்காட்டினர் குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசியையும் பெற்றனர்.

இது தவிர, 12 முதல் 17 வயது வரையிலான இளையோரில் 27 லட்சத்து 97 ஆயிரத்து 767 பேர் அல்லது 88.9 விழுக்காட்டினர் இரண்டு டோஸ் தடுப்பூசியை முழுமையாகப் பெற்ற வேளையில் 28 லட்சத்து 80 ஆயிரத்து 352 பேர் அல்லது 92.6 விழுக்காட்டினருக்கு குறைந்தது ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நேற்று 173,669 பேருக்கு கோவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டதை அமைச்சின் தரவுகள் காட்டுகின்றன. அவற்றில் 51,556 சிறார்கள் உள்பட 54,398 பேர் முதலாவது டோஸ் தடுப்பூசியையும் 1,544 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசியையும் 117,727 பேர் ஊக்கத் தடுப்பூசியையும் பெற்றனர்.

இதன் வழி பிக் எனப்படும் தேசிய கோவிட்-19 தடுப்பூசித் திட்டத்தின் கீழ் செலுத்தப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 6 கோடியே 57 லட்சத்து 2 ஆயிரத்து 8191 ஆக உயர்ந்துள்ளது.

இதற்கிடையே, கோவிட்-19 நோய்த் தொற்று தொடர்புடைய 31 மரணச் சம்பவங்கள் நேற்று பதிவு செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் கிட்ஹாப் அகப்பக்கம் கூறியது.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.